Pages

Saturday, February 5, 2011

Mankatha Shooting in Mumbai - Malaimalar

மும்பையில் உள்ள சேரிகளில் படபிடிப்பு நடத்துவதற்காக மங்காத்தா குழு மும்பை செல்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இறுதிகட்ட படபிடிப்பு மும்பையில் நடக்கவுள்ளது. கிளவுட் நைன் நிறுவனம் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளிகொணர திட்டமிட்டுள்ளது. இதற்காக வேண்டிய வசதிகளை இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு தயாநிதி அழகிரி செய்து கொடுத்துள்ளார்.
இம்மாத கடைசியில் அஜித், திரிஷா, அர்ஜூன்,லட்சுமி ராய், சினேகா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன், வைபவ் ஆகியோர் படபிடிப்புகாக மும்பை செல்கிறார்கள்.உலகின் மிகப்பெரிய சேரியான மும்பையில் உள்ள தாராவி என்ற இடத்தில் படபிடிப்பு நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் சூதாட்டமே மங்காத்தாவின் கதை. இப்படம் அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது.

No comments:

Post a Comment